இன்று மாலை இறுதி ஊர்வலம்... முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தை காலமானார்!

 
ஸ்ரீசாந்த் தந்தை சாந்தகுமாரன்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எஸ். ஸ்ரீசாந்தின் தந்தையும், எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஓய்வுபெற்ற மண்டல மேலாளருமான வி. சாந்தகுமாரன் நாயர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று காலமானார். அவருக்கு வயது 89.

ஸ்ரீசாந்த்

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று 9:45 மணியளவில் பிரிந்தது. அவரது உடல் சொந்த ஊரான கோதமங்கலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. சாந்தகுமாரன் நாயரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்குத் திட்டமிடப்பட்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.