இன்று காலை இறுதி சடங்குகள்... இயக்குநர் பாக்யராஜின் இறுதிப்பயணம்... அனைத்து திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து!

 
பாக்கியராஜ்

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர், நடிகர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் பாக்யராஜின் திடீர் மறைவு திரைத்துறையினரை மட்டுமல்லாமல் தமிழக,  உலக திரைப்பட ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று காலை இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில், ஒட்டுமொத்தத் தமிழ் திரையுலகமும் தங்களின் பணிகளை நிறுத்தி அவருக்கு அஞ்சலியைச் செலுத்த முன்வந்துள்ளது.

மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் தமிழ் சினிமா சேவையைப் போற்றும் வகையிலும், திரையுலகினர் அனைவரும் அவரது இறுதிப் பயணத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்த ஏதுவாகவும் இன்று நாள் முழுவதும் அனைத்து தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாக்கியராஜ்

திரைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்திற்குத் தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த அனைத்து விதமான திரைப்படப் படப்பிடிப்புகளும், அது சார்ந்த இதர பிற தயாரிப்புப் பணிகளும் முற்றிலும் நிறுத்தப்படும்.

இன்று தமிழக அரசின் முழு 'அரசு மரியாதை'யுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதிச் சடங்குகள் முறைப்படி நடைபெறவுள்ளன.  இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்யராஜின் வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் துவங்குகிறது. பெசண்ட் நகர் மின் மயானத்தில் இறுதிசடங்குகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.