இன்று மாலை சென்னையில் இறுதி சடங்குகள்... வெற்றி துரைசாமியின் உடலை கண்டறிந்த வீரர்களுக்கு ரூ.1 கோடி அறிவிப்பு!
இன்று மாலை 5 மணிக்கு, வெற்றி துரைசாமியின் உடல் சென்னை தி.நகரில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், மாலை 6 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று மனித நேய அறக்கட்டளை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்றுமாலை 6 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயான பூமியில் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
கடந்த 8 தினங்களாக எங்கே இருக்கிறார் வெற்றி துரைசாமி என்று தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று சட்லெஜ் நதியில் பாறைகளில் இடுக்கில் இருந்து வெற்றி துரைசாமியின் உடலை ஸ்கூஃபா நீச்சல் வீரர் கண்டுபிடித்தார். வெற்றி துரைசாமியின் உடலைக் கண்டுபிடித்த நீச்சல் வீரர்களுக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
#VetriDuraisamy pic.twitter.com/RiqldLh7D4
— Priya Gurunathan (@JournoPG) February 12, 2024
சென்னை நகரின் முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சலப்பிரதேசம் கஷாங் பகுதியில் படப்பிடிப்புக்காக லொகேஷன் பார்க்க நண்பருடன் சென்றிருந்த நிலையில், இவர்களது கார் நிலைத்தடுமாறி சட்லெஜ் நதியில் விழுந்தது.
வெற்றி துரைசாமியின் நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார் ஓட்டுநர் காரினுள் உயிரிழந்த நிலையில் கிடந்தார். வெற்றி துரைசாமி மாயமான நிலையில், அவரைத் தேடும் பணி கடந்த 8 நாட்களாக நடைப்பெற்று வந்தது. விபத்து பகுதிக்கு அருகே காட்டுப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிப்பதால், அவர்களிடம் தகவல் தெரிவிக்குமாறு இமாச்சல் காவல்துறையினர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், 'மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' எனவும் சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.
காவல்துறை, ராணுவம், விமானப் படை வீரர்கள், ஸ்கூபா நீர்மூழ்கி வீரர்கள் என தொடர்ந்து வெற்றி துரைசாமியைத் தேடும் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று பிப்ரவரி 12ம் தேதி, விபத்து நடந்த 8வது நாளில், கார் விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பாறைகளின் இடுக்கில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேதப் பரிசோதனக்குப் பின் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும்.
வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தமிழக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'வெற்றி துரைசாமி உடலைக் கண்டறிந்த ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு ரூபாய் ஒரு கோடி அளிக்கப்படும்' என சைதை துரைசாமி தெரிவித்ததாக இமாச்சல பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். இதை வெற்றி துரைசாமியின் உடலை கண்டறியும் தேடுதல் படையின் தலைமை அதிகாரியாக இருந்த அமித் குமார் ஷர்மா, நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!