இன்று ஜி20 மாநாடு தொடக்கம்!! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

 
ஜி 20

உலக அளவில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உட்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனையொட்டி   ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்வேறு துறைகளின் பணிக்குழு கூட்டங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டங்கள்  சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.  அந்த வகையில் நேற்று பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதி கூட்டம் சென்னையில்   தொடங்கியது. இந்த மாநாடு இன்றுடன் நிறைவடைய உள்ளது.  

ஜி20


இன்று  ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில்  நடைபெறுகிறது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ள  இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 135 பேர்  கலந்து கொள்கின்றனர்.  ஜி20 கூட்டமைப்பில் இல்லாத நாடுகளைச் சேர்ந்த 32 பேர் விருந்தினர்களாக பங்கு பெறுகின்றனர். இதுதவிர சர்வதேச அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் 23 பேர் கலந்து கொள்கின்றனர்.

ஜி20

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை விரைவுபடுத்துதல், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் பரிமாண சவாலை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள், உலகளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள், அவற்றை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web