கஜகேசரி யோகம்... இந்த 3 ராசிக்காரர்களுக்கு புதிய முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும்!
இன்று 22 ஏப்ரல், புதன்கிழமை (சித்திரை 9) சித்த யோகம் நிறைந்த நாள். மிதுன ராசியில் குரு மற்றும் சந்திரன் இணைவதால் குரு சந்திர யோகம் (கஜகேசரி யோகம்) உருவாகிறது. இன்று சஷ்டி விரதம். முருகப் பெருமானை வழிபட உகந்த நாளாகும். இன்றைய நல்ல நேரம் காலை 09:30 - 10:30 மற்றும் மாலை 04:30 - 05:30. ராகு காலம்: மதியம் 12:00 - 01:30.
மேஷம்: தாமதமான சுபகாரியங்கள் கைகூடும். பண வரவு தாராளமாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும்.
ரிஷபம்: உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
மிதுனம்: உத்தியோகத்தில் அமைதி நிலவும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனம் தேவை.
கடகம்: வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். பெரியவர்களின் ஆசி கிட்டும்.

சிம்மம்: புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.
கன்னி: தம்பதியரிடையே நல்ல புரிதல் உண்டாகும். நீண்ட நாள் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உடல் நலம் சீராகும்.
துலாம்: அண்டை வீட்டாருடன் நட்பு பலப்படும். வேலைப் பளு குறையும். பெண்களின் சேமிப்பு உயரும்; வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: இன்று சந்திராஷ்டமம்! எனவே புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்; அமைதியாக இருப்பது நல்லது.

தனுசு: செல்வாக்கு மிக்க நபரின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்யத் திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம்: தாயாரின் உடல்நிலை சீராகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மீகப் பயணம் செல்லத் திட்டமிடுவீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். சொத்துச் சம்பந்தமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.
மீனம்: ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய தொழிலைத் தொடங்குவதை இன்று தள்ளி வைப்பது நல்லது. வரவு-செலவில் நிதானம் தேவை.
