விநாயகர் சதுர்த்தி நிறைவு - சென்னை கடற்கரைப் பகுதிகளில் 139.69 டன் கழிவுகள் அகற்றம்!

 
சென்னை கடற்கரைப் பகுதிகளில்  கழிவுகள் அகற்றம் குப்பை விநாயகர் கடலில் கரைப்பு தூய்மை குப்பை

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவைத் தொடர்ந்து, சிலைகள் கரைக்கப்பட்ட 5 கடற்கரைப் பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, லட்சக்கணக்கான கிலோ அளவிலான திடக்கழிவுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலவாக்கம், பட்டினப்பாக்கம் ஶ்ரீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் கடற்கரை மற்றும் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய 5 கடற்கரைப் பகுதிகளில் கடந்த செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் ஊர்வலம்

இத்தொடர் நிகழ்வைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில், மொத்தம் 11,653 விநாயகர் சிலைகளும், அதனுடன் சேர்ந்த 84.69 மெட்ரிக் டன் மரக்கழிவுகள், 16.39 மெட்ரிக் டன் பூக்கழிவுகள், 3.65 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகள், 1.35 மெட்ரிக் டன் உணவுக் கழிவுகள் மற்றும் 33.55 மெட்ரிக் டன் இதர கழிவுகள் என மொத்தம் 139.69 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன.

விநயாகர் சிலை ஊர்வலம் கடலில் கரைப்பு

இத்துய்மைப் பணியில் 377 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், பணியின் விரைவுக்காக 13 டிராக்டர்கள், 7 ஜே.சி.பி. வாகனங்கள், 37 டிப்பர் லாரிகள், 26 மின் கள வாகனங்கள், 9 காம்பேக்டர் வாகனங்கள் மற்றும் 3 ஹூக் லோடர் குப்பைத் தொட்டிகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு கடற்கரைகள் மீண்டும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.