சென்னையில் நள்ளிரவு வரை சிலைகள் கடலில் கரைப்பு - விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு!

 
விநயாகர் சிலை ஊர்வலம் கடலில் கரைப்பு

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டுப் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுச் கடலில் கரைக்கப்பட்டுள்ளன.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட சுமார் 1,200 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

விநாயகர் ஊர்வலம்

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைப் பகுதியில் சிலைகளைக் கரைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. கிரேன் மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் நள்ளிரவு வரை இப்பணிகள் தொடர்ந்தன.

விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைப்பு நிகழ்வுகள் எதவித அசம்பாவிதமுமின்றி அமைதியான முறையில் நிறைவேறுவதற்காகக் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.