விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... இன்றிரவு சேலம் வழியாக பெங்களூரு - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!
Sep 11, 2026, 09:30 IST
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டுப் பொதுமக்களின் பயண நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, பெங்களூரு மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்கத் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில் (எண்: 06527) இன்று இரவு 11.35 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, நாளை (சனிக்கிழமை) அதிகாலையில் சேலம் வந்தடைந்து பின்னர் நெல்லை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06528) நாளை பிற்பகல் 3.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, சேலம் வழியாகப் பெங்களூரு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
