12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய விநாயகர்கள்... உங்க ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் விநாயகர் இவர் தான்!

 
அதுல்யா ரவியின் விநாயகர் சதுர்த்தி போட்டோ

விநாயகர் சதுர்த்தி நன்னாளில், அவரவர் ராசிக்குரிய விநாயகரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் சகல வளங்களையும் பெறலாம். ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய சிறப்பு விநாயகர் சொரூபங்கள் குறித்து தெரிஞ்சுக்கோங்க. உங்கள் ராசிக்கான விநாயகரை வழிபடும் போது அதிர்ஷ்டமும், செல்வமும் அதிகரிக்கும். 

மேஷம்: செவ்வாயின் ஆதிக்கம் மற்றும் வீரம் நிறைந்த மேஷ ராசிக்காரர்கள் 'வீர கணபதி'யை வழிபட வேண்டும்.

ரிஷபம்: சுக்கிரனின் ஆதிக்கமும் ராஜயோக அமைப்பும் பெற்ற ரிஷப ராசிக்காரர்கள் ராஜராஜேஸ்வரியின் அம்சமான 'ஸ்ரீவித்யா கணபதி'யை வழிபட வேண்டும்.

மிதுனம்: மறைமுகத் தாக்குதல்கள் மற்றும் எதிரிகளைச் சமாளிக்க வேண்டிய மிதுன ராசிக்காரர்கள் 'லட்சுமி கணபதி'யை வழிபட வேண்டும்.

கடகம்: அபார ஞானமும் ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசிக்காரர்கள் 'ஹேரம்ப கணபதி'யை வழிபட வேண்டும்.

விநாயகர் கணபதி பிள்ளையார் சதுர்த்தி

சிம்மம்: தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் வெற்றித் திருமகளின் அருளைத் தரும் 'விஜய கணபதி'யை வழிபட வேண்டும்.

கன்னி: காரிய சித்தியில் சிறந்து விளங்கும் கன்னி ராசிக்காரர்கள் 'மோகன கணபதி'யை வழிபட வேண்டும்.

துலாம்: அயராத உழைப்புடன் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் துலாம் ராசிக்காரர்கள் 'ஷிப்ர ப்ரஸாத கணபதி'யை வழிபட வேண்டும்.

விருச்சிகம்: எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கும் விருச்சிக ராசிக்காரர்கள் 'சக்தி கணபதி'யை வழிபட வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி

தனுசு: தர்மநெறியைப் பின்பற்றுவதால் ஏற்படும் சங்கடங்களை நீக்கத் தனுசு ராசிக்காரர்கள் 'சங்கடஹர கணபதி'யை வழிபட வேண்டும்.

மகரம்: தியாக உள்ளமும் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையும் கொண்ட மகர ராசிக்காரர்கள் 'யோக கணபதி'யை வழிபட வேண்டும்.

கும்பம்: தனித்திறமையால் முன்னேறிவரும் கும்ப ராசிக்காரர்கள் 'சித்தி கணபதி'யை வழிபட வேண்டும்.

மீனம்: கள்ளங்கபடமற்ற குழந்தைத்தனமான குணம் கொண்ட மீன ராசிக்காரர்கள் 'பால கணபதி'யை வழிபட வேண்டும்.