கொடூரம்... காதலனைத் தாக்கி இளம்பெண் கூட்டு பலாத்காரம்... 3 பேர் கைது!

 
ilampen ilampen

கேரளா மாநிலம் கொச்சியில் தனியார் நிறுவன மேலாளராகப் பணிபுரியும் 25 வயது இளம்பெண், தனது காதலனுடன் ரயில் நிலையம் சென்றபோது மழையிலிருந்து ஒதுங்க ஒரு பாழடைந்த ஓட்டலுக்குள் சென்றுள்ளார். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 3 பேர் கொண்ட கும்பல், காதலர்களைத் பின்தொடர்ந்து சென்று கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். இதைத் தடுத்த காதலனை அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலியல் வன்கொடுமை பலாத்காரம் மனைவி தகராறு தம்பதி சண்டை

காமவெறியர்களின் பிடியிலிருந்து தப்பிக்கப் போராடிய இளம்பெண், ஒருவரது கையை ஆவேசமாகக் கடித்துவிட்டு அங்கிருந்து கிழிந்த ஆடைகளுடன் தப்பியோடியுள்ளார். பின்னர் ஏணி வழியாகக் கீழே இறங்கிச் சென்று காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த காதலனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளிக்க முதலில் தயங்கிய போதிலும், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

ஐஆர்.எஸ். பலாத்காரம் டெல்லி மகள்

போலீசாரின் தீவிரத் தேடுதல் வேட்டையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரவுடி டேனிஷ், ராகுல் மற்றும் சஞ்சய் ஆகிய 3 பேரும் சிக்கினர். இவர்கள் மதுபோதையில் இந்த அநாகரீகச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானது. கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்தக் கூட்டு பலாத்காரச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.