நைட் பார்ட்டியில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை... பெண்களும் உடந்தையாக இருந்த கொடூரம் - டெல்லியில் அதிர்ச்சி!

 
பாலியல் பலாத்காரம் வன்கொடுமை சிறுமி

டெல்லி ப்ரீத் விஹார் பகுதியில் உள்ள கபேவில் நடைபெற்ற விருந்தின் போது 22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து 4 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ப்ரீத் விஹார் பகுதியில் உள்ள கபேவில் 22 வயது இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். கபே மூடப்பட்ட பிறகு, சக ஊழியர்களுடன் சேர்ந்து அவர் அந்த இடத்திலேயே நடைபெற்ற விருந்தில் பங்கேற்றுள்ளார். இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு அதிகாலை 3.30 மணி வரை நடனமாடிக் கொண்டிருந்தபோது, இரண்டு ஆண் சக ஊழியர்கள் தம்மைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மற்ற 2 பெண் ஊழியர்கள் அதற்கு உடந்தையாக இருந்து உதவி செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என மொத்தம் ஆறு பேர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ள மூன்று பேரைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

கூட்டுப்பாலியல் பலாத்காரம்

நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.