பிப்ரவரி 5ம் தேதி வரை கங்கா ஆரத்தி நிறுத்தம்... மகா கும்பமேளாவில் பக்தர்கள் வருகை!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13ம் தேதி மகாகும்பமேளா தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி கும்பமேளாவில் இதுவரை 29 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். திரிவேணி சங்கமத்துக்கு பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கங்கை படித்துறையில் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் கங்கா ஆரத்தி 5ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக கங்கா சேவா நிதி அமைப்பின் தலைவர் சுஷாந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஷீத்லா படித்துறை, அஸ்ஸி படித்துறை உட்பட படித்துறைகளிலும் ஆரத்தி நிகழ்ச்சியை பிப்ரவரி 5ம் தேதி வரை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிக அளவில் பக்தர்கள் சேரும்போது கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எனத் தெரியவந்துள்ளது. ஜனவரி 28ம் தேதி அதிகாலை திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!