எகிறும் எதிர்பார்ப்பு... இன்று மதியம் வெளியாகிறது கங்குவா ட்ரெய்லர்... அசத்தலான அப்டேட்ஸ்!

 
கங்குவா
 

கங்குவா படத்தின் ட்ரெய்லர் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கங்குவா படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மதியம் 1 மணிக்கு வெளியிடப் போவதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.நடிகர் சூர்யா, இயக்குநர் சிவா இயக்கத்தில் தயாராகி வரும் ‘கங்குவா’படம் வரலாற்று பின்னணியில் உருவாகி இருக்கிறது. ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கங்குவா

நடிகர் சூர்யாவுடன் திஷா பட்டாணி மற்றும் பாபி டியோல் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியுடன் நிகழ்கால சம்பவங்களை இணைத்து வித்தியாசமான படைப்பை இயக்குனர் சிவா கங்குவா படம் மூலம் உருவாக்கியுள்ளார். கங்குவா ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இதே அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படமும் வெளியாகும் என கூறப்படுவதால் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம். கங்குவா படத்திலிருந்து வெளியிடப்பட்ட முதல் பாடல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா