இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... உச்சம் தொட்ட பூண்டு, முருங்கைக்காய்!

 
பூண்டு முருங்கைக்காய்

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெங்காயம் தக்காளி விலை  பெரிதளவில் பாதிப்பு அடைந்துள்ளது.
அந்த வகையில் இன்று  முருங்கைக்காய் மற்றும்  பூண்டின்  விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தக்காளி சின்ன வெங்காயம்

அதன்படி  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் முருங்கைக்காய் நேற்று வரை 1 கிலோ ரூ.250க்கு  விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து, மொத்த விலைக்கு  1 கிலோ ரூ. 350 ரூபாயாகவும் மற்றும் சில்லறை விலைக்கு ரூ.380 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சந்தையில் இன்று பூண்டின் மொத்த விலையில்  1 கிலோ ரூ.450 ரூபாயாகவும் மற்றும் புறநகர் பகுதிகளில் 1 கிலோ ரூ.550 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

வெங்காயம் தக்காளி


அதே போல் கடந்த சில நாட்களாக கிலோ ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் இன்று கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி  சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web