இந்தியா முழுவதும் 450 மாவட்டங்களில் வீடுகளுக்கு பைப் மூலம் கேஸ்.... பணிகள் மும்மூரம்!

 
பைப் மூலம் கேஸ்

 இந்தியா முழுவதும் 450 மாவட்டங்களில் சமையல் எரிவாயு பைப் மூலம் வீடு வீடாக வழங்கும் திட்டம் செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி  மாவட்டங்களில் ரூ.1300 கோடியில் 29 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான பணிகள் மும்மூரமாக  நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக தூத்துக்குடி நகர பகுதிகளில் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்கான குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.  

பைப் மூலம் கேஸ்

காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  அதிகமாக மாசை ஏற்படுத்தும் வாகன எரிபொருள் உபயோகம், சமையலுக்கு எல்பிஜி காஸ், நிலக்கரி, விறகின் பயன்பாடு குறைக்கப்பட்டு அதே நேரத்தில் பைப் மூலம் கேஸ் வழங்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு  நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது.
அந்த வகையில், நிலத்திற்கு அடியில் இருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயுவை சேமித்து வைப்பதால் வீட்டுகாஸ் இணைப்பு, வாகன எரிபொருள், தொழிற்சாலை பயன்பாடு இவைகளுக்காக  2005ல்  நகர எரிவாயு விநியோக திட்டம் அறிவிக்கப்பட்டது.  

பைப் மூலம் கேஸ்

இத்திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் மத்திய  அரசு  450 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல் வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை  இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம்  மூலம் 2022ம் ஆண்டு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, கோவை, சேலம், மதுரை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி  மாவட்டங்களில் இயற்கை எரிவாயு விநியோக திட்டம் தொடங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

From around the web