ஓரின சேர்க்கையாளர் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
மனு

கேரள மாநிலம் கண்ணூர் பய்யாவூர் பகுதியைச் சேர்ந்தவர் மனு. இவரும் கோட்டயம் மாவட்டம், முண்டகயம் பகுதியைச் சேர்ந்த ஜெபின் என்பவரும் நெருக்கமாகப் பழகினர். பின்னர் எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) அடிப்படையில் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக ஜோடியாக கொச்சி களமசேரியில் ஒரே பிளாட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டது, கவனம் ஈர்த்தது.

இரண்டு இளைஞர்களும் திருமணம் செய்துகொண்டதற்கு அவர்களின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் அவர்களுடனான தொடர்பையும் துண்டித்தனர். இந்த நிலையில் பிளாட்டின் மொட்டைமாடிக்குச் சென்று போன் பேசிக்கொண்டிருந்த மனு, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தவறி விழுந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காமல் கடந்த திங்கள்கிழமை மனு உயிரிழந்தார்.

 அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

மனு மொட்டைமாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவில்லை. இந்நிலையில் அவர் இறந்தது குறித்து தகவல் கிடைத்ததும் உறவினர்கள் நேரில் சென்று பார்த்தனர். அப்போது, அவர் உடலைப் பெற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனால் அவர் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது இணையாக வாழ்ந்த ஜெபின் மனுவின் உடலைப் பெற்று இறுதிச்சடங்கு செய்ய தயாராக இருந்தார். ஆனால், மனுவின் ரத்த பந்தம் இல்லாத ஜெபினிடம் உடலை ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. இதையடுத்து மனுவின் உடலைப் பெற்று, இறுதிச்சடங்கு செய்வதற்கு தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஜெபின் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவின் சகோதரரிடம் பேசுமாறு கூறியது.

 சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

 மனுவின் சிகிச்சை செலவான ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொகையை மருத்துவமனைக்குச் செலுத்த வசதி இல்லாததால்தான் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால், மனுவின் உடலை பெற்று இறுதிச்சடங்கு செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த இறுதிச்சடங்கில் ஜெபின் கலந்துகொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் உறவினர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து மருத்துவ செலவுக்கான ஒரு லட்சம் ரூபாயை  ஜெபின் மருத்துவமனையில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் ஜெபினுக்கு ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும் எனவும் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மனுவின் உடலைப் பெற்று இறுதிச்சடங்கு செய்யும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டனர். இரண்டு ஆண்கள் கோவிலில் திருமணம் செய்துகொண்டு ஜோடியாக வாழ்ந்தாலும், அவர்களை நெருங்கிய பந்தமாகக் கருத இயலாது என்பது மனுவின் மரணம் மூலம் தெரியவந்துள்ளது.

From around the web