காசா வான்வழித் தாக்குதல்: ஹமாஸ் துணை கல்வி அமைச்சர் உள்பட 8 பேர் பலி!
காசா முனையின் மத்திய பகுதியில் உள்ள டெயிர் அல்-பலா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணை கல்வி அமைச்சர் காலித் அபு நடா மற்றும் அவரது மனைவி உட்படப் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 8 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய காசாவில் உள்ள குடியிருப்புப் பகுதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுடன், காசா நகரிலும் வேறு சில தாக்குதல்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மாதத்தில் மட்டும் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த சுமார் 80 பேரை இஸ்ரேல் தாக்கி அழித்துள்ளதாகவும், தலைமைத்துவத்தில் உள்ள யாரும் தப்ப முடியாது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் மத்தியக் கிழக்கில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
