காசாவில் இஸ்ரேல் தாக்குதல்... குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

 
காஸா

 

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 Israeli strike in Gaza kills 4 including children and other Mideast developments - The Boston Globe

  • கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினர்.

  • ஆண்டுதோறும் நடத்தப்படும் இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட 1,100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

  • இதுமட்டுமின்றி, இஸ்ரேலில் இருந்து 251 பேரைப் பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் காசா முனைக்குக் கடத்திச் சென்றனர்.

  • பணயக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையில் இஸ்ரேல் மீட்ட போதிலும், தொடர்ந்து தீவிர அதிரடித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Family, including six children, among 25 killed in Israeli attacks on Gaza

இந்தத் தொடர் போரில் இதுவரை காசா முனையில் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1.74 லட்சத்திற்கும் கூடுதலானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.