ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் மேலும் திருப்பம் - உதவியாளர் சாந்தி பரபரப்பு புகார்!
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி தொடர்பான பாலியல் மற்றும் வழக்கில், அவரது உதவியாளராக இருந்த சாந்தி வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெம் கிரானைட் வீரமணி மற்றும் அவரது மகனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வீரமணியின் உதவியாளர் சாந்தி புகார் தெரிவித்துள்ளார். தான் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் பதிவு செய்துள்ள வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது 13 வது வயது முதலே வீரமணி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திச் சீரழித்ததாக சாந்தி அந்தப் புகாரில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் விசாரணைத் திசையை மாற்றியுள்ளன.
