ஜெம் வீரமணி வீட்டின் பின்புறம் சிறுமியின் உடலா? ஜேசிபி மூலம் தோண்டும் போலீசார்!
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தொடர்பான வழக்கில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவரது சென்னை ராயப்பேட்டை வீட்டின் பின்புறத்தில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக எழுந்த தகவலையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெம் வீரமணி வீட்டில் சி*மி ச*லம் புதைப்பா?.. டிரைவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் வீட்டின் பின்புறம் ஜேசிபி மூலம் தோண்டும் போலீஸ்.. #Chennai | #GemVeeramani | #Police | #PolimerNews https://t.co/HcprL1W8zO
— Polimer News (@polimernews) November 14, 2026
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணியின் ஓட்டுநர் பாலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், அவரது உடலை வீட்டின் பின்புறத்தில் புதைக்க வீரமணி கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஓட்டுநர் பாலாவை அழைத்துக்கொண்டு ராயப்பேட்டையில் உள்ள வீரமணியின் வீட்டுக்குச் சென்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், அவர் அடையாளம் காட்டிய இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி சோதனை நடத்தி வருகின்றனர்.
சுமார் 10 அடி ஆழம் வரை தோண்டி சோதனை நடைபெற்று வரும் நிலையில், சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சோதனை முடிவுகளுக்குப் பிறகே இந்தப் புகாரின் உண்மைத்தன்மை தெரியவரும்.இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
