ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... இதுவரை 18 சிறுமிகள் பாதிப்பு - 2வது குற்றப்பத்திரிகை தாக்கல்!

 
வீரமணி சாந்தி

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்புடைய சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில், இதுவரை 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இரண்டாவது குற்றப்பத்திரிகையைச் சிறப்புப் புலனாய்வுக் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விரிவான விசாரணையில், இந்தச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இதுவரை மொத்தம் 18 சிறுமிகள் துன்புறுத்தலுக்கு உள்ளானது கண்டறியப்பட்டுள்ளது.

ஜெம் ​​​​​​​வீரமணி SRMU கண்ணையா மகன் பிரகாஷ்

இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளில் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து வழக்குகளிலும் விசாரணையை விரைந்து முடித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் தொடர்புடைய மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரான பிரகாஷ் லண்டனில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரைப் பிடிக்க நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சர்வதேசக் காவல்துறையான இன்டர்போல் மூலம் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி​​​​​​​

தலைமறைவாக உள்ள குற்றவாளியைக் கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சட்ட மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.