போலீசாருக்கு லஞ்சமாக தங்க கட்டிகளைக் கொடுத்த ஜெம் வீரமணி - வாக்குமூலத்தால் பரபரப்பு!
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஜெம் வீரமணி, குற்றத்தை மறைப்பதற்காகப் போலீஸ் அதிகாரிகளுக்குத் தங்கக் கட்டிகளை வாரி வழங்கியுள்ளதாக அளித்துள்ள வாக்குமூலம் தமிழகத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025 அக்டோபரில் ஜெம் வீரமணி மீதான போக்சோ புகாரில், ஆரம்பகட்ட விசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை முடிக்கப் போலீசார் முயன்றனர். ஆனால், போக்சோ சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை ஏற்காமல் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது.

தொடர் மறுவிசாரணைக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் 29 அன்று ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்ஹான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையின் போது, பணமாக வாங்கினால் பிரச்சனை ஏற்படும் என்பதால் போலீஸ் அதிகாரிகள் தனமிடமிருந்து பரிசாகத் தங்கக் கட்டிகளை வாங்கியதாக வீரமணி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தத் தங்கக் கட்டிகளை ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகனும், திமுக பிரமுகருமான பிரகாஷ் என்பவர் இடைத்தரகராக நின்று வாங்கிக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
