பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்!! கல்வி அமைச்சர் உறுதி!!

 
பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்!! கல்வி அமைச்சர் உறுதி!!

தமிழகத்தில் கொரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளது. இதனையடுத்து 1 முதல் 8 வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் வீட்டிலேயே இருந்ததால் முதலில் அவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்!! கல்வி அமைச்சர் உறுதி!!

அதில் பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவது கடும் வேதனையை அளிக்கிறது. இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளிகளும் இதனை கடைப்பிடிக்கவும், அதனை உறுதி செய்யவும் உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில் பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும்.
மேலும் தமிழகத்தில் பாலியல் புகார்கள் குறித்து தெரிவிக்க இலவச அழைப்பு எண்கள் 1098, 14417 வழங்கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்!! கல்வி அமைச்சர் உறுதி!!

இது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து பாடப் புத்தகங்களிலும் இந்த எண்கள் அச்சிடப்படும். நடப்பாண்டில் ஸ்டாம்ப் மூலம் இலவச உதவி எண்கள் இடம் பெற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கொரோனா கால கற்றல் குறைபாட்டை சரிசெய்ய இல்லம் தேடி கல்வித்திட்டம் பெரும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டங்கள் 30% முதல் 50 % வரை குறைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள், இல்லம் தேடி கல்வி என குறைபாடுகளை நீக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் குறிப்பிட்ட தேதியில் நடைபெறும். இந்த தேர்வுகள் நேரடித் தேர்வுகளாகவே இருக்கும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

From around the web