தொடர் சரிவில் தங்கம் விலை.. சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
தங்கத்தின்  விலை மேலும் குறைய வாய்ப்பு! நிபுணர்கள் விளக்கம்!

உலகம் முழுவதும் இருக்கும் மக்களை தங்கம் எப்போதும் கவர்ந்திழுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் தங்கத்தை மிகவும் விரும்புகிறார்கள். தங்கத்தைப் பற்றிய ஏராளமான கதைகளை கேட்டிருக்கலாம். ஆனால், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் ஏராளமான தங்கம் பூமியில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? பூமியில் இன்னும் 80 சதவிகித தங்கம் கண்டறியப்படாமல் உள்ளது என்று கூறும் பல ஆய்வுகள் வந்துள்ளன. அப்படியானால், அந்த தங்கம் எங்கே? தங்கம் எங்கிருக்கிறது என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், தங்கத்திற்கான‌ தேவை அதிகமாக இருந்தாலும் அதற்கான அழுத்தத்தை இந்தியாவில் காண முடியாது. ஏனெனில் போதுமான தங்கம் சந்தையில் கிடைத்தபடி இருக்கும். தங்க நாணயங்கள், தங்க கட்டிகள், நகைகள் போன்ற வடிவங்களில் உலகில் நிறைய தங்கம் கிடைக்கிறது. அந்த தங்கத்தை உருக்கிக் கொள்ளலாம். எனவே, தங்கத்திற்கு பற்றாக்குறை எதுவும் ஏற்படாது. ஆபரணத் தங்கம் வேறு உலோகங்களோடு கலந்து தயாரிக்கப்படுவதால், அதில் சுத்தமான தங்கம் எவ்வளவு என்பது போன்ற கேள்வி நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தங்கம்

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து, ரூ.6,185-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ரூ.49,480-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,079-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 13 ரூபாய் குறைந்து, ரூ.5,066-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 79,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் உயர்ந்து, ரூ.80,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web