பிரபல ஹாலிவுட் நடிகை ஜார்ஜினா கேட்ஸ் காலமானார்!

 
ஜார்ஜினா

 

பிரபல ஹாலிவுட் நடிகை ஜார்ஜினா கேட்ஸ் தனது 51-வது வயதில் காலமானார். இவர் நடித்த ‘2point4 Children’ தொலைக்காட்சித் தொடர் மற்றும் ‘An Awfully Big Adventure’, ‘Clay Pigeons’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றவை.

Georgina Cates dead: 2point4 Children star dies 'suddenly' aged 51 as tributes pour in

1991-ம் ஆண்டு தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய ஜார்ஜினா கேட்ஸ், ‘2point4 Children’ தொடரில் ஜென்னி போர்ட்டர் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றார். 1995-ம் ஆண்டு வெளியான ‘An Awfully Big Adventure’ படத்தில் ஹக் கிராண்ட், ஆலன் ரிக்மேன் ஆகியோருடன் நடித்தார். பின்னர் ‘Clay Pigeons’ படத்தில் ஜோவாகின் ஃபீனிக்ஸ் உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்தார்.

2point4 Children actress Georgina Cates dies aged 51 as tributes pour in - Irish Mirror

அவரது மறைவு குறித்த தகவலை மகள் நையா ரோஸ் உல்ரிச் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவின் மூலம் பகிர்ந்தார். ஜார்ஜினா கேட்ஸ் கடந்த மே 6-ம் தேதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. காலதாமதமாக வெளியான இந்தச் செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.