ஜெர்மனியில் சிறுமிக்கு ரோபோ மூலம் பாலியல் தொல்லை? பகீர் வீடியோ !

 
ரோபோ

 

ஜெர்மனியில் 16 வயது சிறுமிக்கு மனித உருவ ரோபோ மூலம் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த ரோபோவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியிடம் அத்துமீறியதாக புகார்

ஜெர்மனியின் கொலோன் நகரில் உள்ள துரித உணவகம் ஒன்றின் அருகே, கடந்த வார இறுதியில் நள்ளிரவு நேரத்தில் 16 வயது சிறுமி தனது தோழிகளுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது சுமார் 120 சென்டிமீட்டர் உயரமுள்ள மனித உருவ ரோபோ ஒன்று சிறுமியைப் பின்புறமாக அணுகி, தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி போலீசாரிடம் புகார் அளித்தார்.

ரோபோவை இயக்கியது யார்? போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அப்பகுதியில் இருந்த இரு இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். காரில் வைக்கப்பட்டிருந்த ரோபோவையும், அவர்களது செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். ரோபோவின் செயல்பாடுகள் முன்கூட்டியே நிரலாக்கப்பட்டதா அல்லது செல்போன் மூலம் தொலைவிலிருந்து இயக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை குற்றச்சாட்டுகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டதாகத் தகவல் இல்லை. விசாரணையின் முடிவில் ரோபோவை இயக்கியவர்களின் பங்கு குறித்து தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.