ஜெர்மனியின் பீர் திருவிழா கோலாகலம்... பேயர்ன்ஸ் முனிச் கால்பந்து வீரர்களும் தோழிகளுடன் பங்கேற்பு!
ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான பேயர்ன்ஸ் முனிச் அணியின் வீரர்கள், பாரம்பரிய உடைகளை அணிந்து தங்களது பெண் தோழிகளுடன் உலகப் புகழ்பெற்ற பீர் திருவிழாவில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.
ஜெர்மனியில் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பீர் திருவிழாவில், பேயர்ன்ஸ் முனிச் அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து பங்கேற்றனர்.

இந்த உற்சாகத் திருவிழாவில் வீரர்கள் தங்களது பெண் தோழிகளுடன் கலந்துகொண்டு, கைகளில் பீர் கோப்பைகளை ஏந்தியவாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன.
விளையாட்டு மைதானங்களில் தீவிர பயிற்சி மற்றும் போட்டிகளில் பிசியாக இருக்கும் இந்த நட்சத்திர வீரர்கள், இதுபோன்ற கலாச்சார மற்றும் பாரம்பரிய திருவிழாக்களிலும் தவறாமல் பங்கேற்று மக்களுடன் இணைந்து கொண்டாடுவது வழக்கம்.
