பெண்களைக் கர்ப்பமாக்குவது தான் வேலையே... ₹13 லட்சம் சம்பளம்? - இளைஞர்களுக்கு வலைவிரிக்கும் கும்பல்!?

 
வரதட்சணை பணம் தாம்பத்தியம் தம்பதி வரதட்சணை பணம் தாம்பத்தியம் தம்பதி

பீகார் மாநிலம் நவாடா பகுதியில் 'அகில இந்திய கர்ப்பிணி வேலை சேவை' என்ற பெயரில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் மோசடி விளம்பரம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒரு திட்டமிடப்பட்ட ஆன்லைன் மோசடி என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சமூக வலைதளங்களில் இளைஞர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு என இந்த விளம்பரம் பரப்பப்பட்டு வருகிறது. பெண்களின் புகைப்படங்களைக் காட்டி, அவர்களைக் கர்ப்பமாக்கும் இளைஞர்களுக்கு ₹13 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமி கர்ப்பம்

ஒருவேளை அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என்றாலும், முயற்சி செய்ததற்காக ₹5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என ஆசை காட்டப்படுகிறது. இந்த "வேலையில்" சேர விரும்புவோர் முதலில் உறுப்பினர் கட்டணமாக ₹7 லட்சம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நவாடா மாவட்டக் காவல்துறையினர் இந்த விளம்பரம் முற்றிலும் போலியானது என்றும், இது இளைஞர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட "ஹனி ட்ராப்" வகை மோசடி என்றும் தெரிவித்துள்ளனர். அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டுப் பணத்தைச் செலுத்தும் இளைஞர்களை ஏமாற்றி, அவர்களது தனிப்பட்ட விவரங்களைத் திருடுவதே இவர்களின் நோக்கம்.

கர்ப்பம்

இந்த மோசடி கும்பல் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எங்கிருந்து இந்த இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் இயக்கப்படுகின்றன? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நம்பத்தகாத மற்றும் ஒழுக்கத்திற்கு முரணான வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தையோ அல்லது தனிப்பட்ட அடையாளச் சான்றுகளையோ (ஆதார், வங்கி விவரங்கள்) பகிர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு நிறுவனம் வேலை வழங்குகிறது என்றால், அதன் நம்பகத்தன்மையை அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் சரிபார்க்க வேண்டும். இத்தகைய மோசடி விளம்பரங்களைக் கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது தேசிய சைபர் கிரைம் புகார் இணையதளம் (1930) மூலமாகவோ புகார் அளிக்கலாம்.