பொத்துக்கொண்டு ஊற்றும் பேய்மழை!! 256 பேர் பலி!! வெள்ளத்தில் மூழ்கிய 7500 வீடுகள் !!

 
மேகவெடிப்பு

இமாச்சலப் பிரதேசம்  மாண்டி மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. வானம் பொத்துக்கொண்டு பேய்மழை ஊற்றி வருகிறது.   அளவிட முடியாத அளவிற்கு அடர்த்தியான மழை பெய்ததால் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  அதன் காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலைகள் பலத்த சேதம் அடைந்து இருப்பதால், மாண்டியில் மட்டும் 150 சாலைகள் மூடப்பட்டு விட்டன.  

மேகவெடிப்பு

சர்காஹான் என்ற இடத்தில் மண்  சரிவு ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட வீடுகள் பெரும்சேதம் அடைந்துள்ளன. இதனால் அங்குவசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன.   இமாச்சலில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு இடங்களில் மொத்தம் 452 சாலைகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவால் சில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. 

மேகவெடிப்பு


இந்நிலையில் சோலனில் மேகவெடிப்பு காரணமாக  பெய்த கனமழையால் இதுவரை  7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து   மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜூன் மாதம் 24 முதல் இதுவரை   ஹிமாச்சலில்  256 பேர் உயிரிழந்துள்ளனர்.  7,500 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.  மொத்தம் ரூ6,807 கோடி  அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக  மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web