'கில்லி' மியூசிக்... 'விசில்' சத்தம்.. தவெகவுக்கு வோட்டு போட்ட த்ரிஷா.. இன்ஸ்டாவில் செம கெத்து!

 
த்ரிஷா த்ரிஷா

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளான இன்று ஏப்ரல் 23 தனது வாக்கினைப் பதிவு செய்த நடிகை த்ரிஷா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு சமூக வலைதளங்களில் "கோட் வேர்ட்" விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் தனது தாயாருடன் வந்து வாக்களித்த த்ரிஷா, அதன் பிறகு தனது விரலில் வைக்கப்பட்ட மையைக் காட்டியபடி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

த்ரிஷா

அந்தப் புகைப்படத்தின் பின்னணியில், அவரும் விஜய்யும் இணைந்து நடித்து மெகா ஹிட்டான 'கில்லி' படத்தின் 'அர்ஜுனரு வில்லு' பாடலை இணைத்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்தப் பாடலில் வரும் 'விசில்' சத்தங்கள் அடங்கிய பகுதியை அவர் தேர்ந்தெடுத்துப் பதிவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் 'விசில்' என்பதால், த்ரிஷா மறைமுகமாகத் தனது ஆதரவை விஜய்யின் கட்சிக்குத் தெரிவித்துவிட்டதாக ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே நிறத்திலான ஆடையில் ஜோடியாகக் கலந்துகொண்டது ஏற்கனவே விவாதமான நிலையில், இன்றைய அவரது 'இன்ஸ்டா ஸ்டோரி' அந்த விவாதத்திற்குத் தீனி போடும் வகையில் அமைந்துள்ளது. த்ரிஷாவின் இந்தப் பதிவின் கீழ் "அண்ணி ஆன் ஃபயர்", "கோட் வேர்ட் அக்சப்டட்" என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

த்ரிஷா

செய்தியாளர்களிடம் பேசியபோது, "எதிர்பார்ப்பு என்ன?" என்ற கேள்விக்கு, "அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்" எனத் தவிர்த்த த்ரிஷா, தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சிக்னலைக் கொடுத்துள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.