’கில்லி' பட நடிகர் சிவா புற்றுநோயால் காலமானார் ... ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!
விஜய் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'கில்லி'. இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சிவா நேற்று திடீரெனக் காலமானார். இவரது மறைவு செய்தி வெளியாகித் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் இயல்பான நடிப்ப வெளிப்படுத்தி வந்த இவரது திடீர் இழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில காலமாகவே இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கில்லி படத்தில் விஜய் இவரிடம் பேசும் 'ஆல் ஏரியாலயும் ஐயா கில்லிடா' என்ற புகழ்பெற்ற வசனம் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்காமல் உள்ளது. அந்த மறக்க முடியாத காட்சிக்கு உயிரூட்டிய இவரது மறைவு திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது. நடிகர் சிவாவின் மறைவு குறித்து அறிந்ததும் சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவுக்குப் பலர் நேரில் சென்றும், இணையவழியிலும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
