பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே மாயமான 7 வயது சிறுமி! 4-வது நாளாக தீவிர தேடுதல்
Oct 15, 2026, 19:15 IST
செஞ்சி அருகே பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைத் தேடும் பணி 4-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் மகள் ஹேமாவதி (7). இவர் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11-ம் தேதி இரவு சிறுமியின் பிறந்தநாளையொட்டி குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு சிறுமி பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை. உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
