செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: கூடுதல் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வேல்முருகன் நியமனம்

 
சிறுமி

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியைத் தேடும் பணியை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் கூடுதல் விசாரணை அதிகாரியாக காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுமி காணவில்லை விழுப்புரம் கடத்தல்

ஆலம்பூண்டி பகுதியைச் சேர்ந்த சிறுமி கடந்த 12-ம் தேதி மாயமானார். இதையடுத்து, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. தற்போது டிஎஸ்பி கீதா தலைமையிலான அதிகாரிகள் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமி

விசாரணையை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் கூடுதல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி எங்கு சென்றார், அவர் மாயமானதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.