செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: 3 நாட்களில் விசாரணையை முடிக்க சிபிசிஐடி நம்பிக்கை!

 
செஞ்சி

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், அடுத்த 3 நாட்களில் விசாரணையை முடிக்க முடியும் என சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிறுமி காணவில்லை விழுப்புரம் கடத்தல்

கடந்த 12-ம் தேதி சிறுமி காணாமல் போன நிலையில், 16-வது நாளாகியும் அவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் 6-வது நாளாக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்த வழக்கில், சிறுமிக்கு ஜாதகம் எழுதிய ஆலம்பூண்டியைச் சேர்ந்த காத்தவராயனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சிறுமி

சிறுமி மாயமானதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் வழக்கில் முன்னேற்றம் ஏற்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.