சந்தோஷமாக மராத்தானில் ஓடிய இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.... அதிர்ச்சி வீடியோ!

 
அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற 24 வயது இளம்பெண் ஒருவர், இலக்கை அடைய சுமார் 2 மைல் தூரம் மட்டுமே இருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த ரேச்சல் அப்பா (Rachel Apa) என்ற அந்த இளம்பெண், நவம்பர் 1-ம் தேதி நடைபெற்ற நியூயார்க் மாரத்தானில் முதன்முறையாகப் பங்கேற்றார். போட்டியின் 24-வது மைல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் முதலுதவி அளித்ததுடன், மருத்துவக் குழுவினரும் சிகிச்சை அளித்தனர். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

NYC Marathon runner Rachel Apa, 24, dies after collapsing in Central Park two miles from finish line - Yahoo Sports

அதிகப்படியான உடல் உழைப்பால் தசைகள் சிதைவடைந்து, அவற்றிலிருந்து வெளியாகும் பொருட்கள் ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் 'ராப்டோமைலிசிஸ்' (Rhabdomyolysis) பாதிப்பால் அவர் உயிரிழந்ததாக அவரது தந்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். எனினும், நியூயார்க் நகர மருத்துவப் பரிசோதகர் அலுவலகம் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறது.தனது தாத்தாவின் நினைவாக பார்கின்சன் நோய் விழிப்புணர்வுக்காக நிதி திரட்டும் நோக்கில் ரேச்சல் இந்த மாரத்தானில் பங்கேற்றிருந்தார்.