சிறுமியின் உணவுக்குழாயில் சிக்கிய ஹேர்கிளிப்... கதறித் துடித்த தந்தை... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
ஹேர் கிளிப்

 

சிறுமி ஒருவரின் உணவுக்குழாயில் ஹேர்கிளிப் சிக்கியதால், அதனை அகற்ற மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு மகளுக்கு மருத்துவக் குழாய் செலுத்தப்படும் காட்சியைப் பார்த்து தாங்க முடியாமல் அழுத தந்தையின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

தனது மூத்த மகளின் சிகிச்சையைப் பார்த்து மனமுடைந்ததாக அந்தத் தந்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மகள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தப் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சிறுமி விரைவில் நலம்பெற வேண்டும் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவில் இடம்பெற்றுள்ள மருத்துவ நடைமுறை குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இருப்பினும், சிகிச்சையின் முழு விவரங்களும் சிறுமியின் தற்போதைய உடல்நிலையும் உறுதிப்படுத்தப்படவில்லை.