எனக்கு 24.. அவனுக்கு 57.. என் வயசுல இரண்டு பொண்ணுங்க.. என்ன ஏமாத்திட்டான்.. தர்ணாவில் ஈடுப்பட்ட இரண்டாவது மனைவி..!

 
ஆர்த்தி

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஆர்த்தி. இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணனுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், கரோனா காலத்தில் உடல்நலக்குறைவால் கண்ணன் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 10ம் தேதி ஆர்த்தி, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான பாஸ்கர் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் ஆர்த்தியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் தொந்தரவு செய்வதாக கூறி பாஸ்கர் ஆர்த்தியுடன் அவ்வப்போது சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது. ஆனால் எனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்தே என்னை திருமணம் செய்து கொண்டதாக ஆர்த்தியும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் குடும்பத்துடன் காரில் சென்றபோது, ​​மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பாஸ்கர், ஆர்த்தியையும் இரண்டு குழந்தைகளையும் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்த்தி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து பாஸ்கரின் ஹோட்டலுக்கு வருமாறு கூறியுள்ளார். அப்போது பாஸ்கர் மற்றும் ஆர்த்தியின் உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஸ்கர் தனது வழக்கறிஞரை அழைத்து வந்தார்.

Salem 24 years girl complaint against American husband

நிலைமை மோசமடைந்ததை உணர்ந்த அவர், காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் பாஸ்கரனை பத்திரமாக மீட்டு  வாகனத்தில் ஏற்றினர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.பாஸ்கருக்கு என் வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் அவன் என்னை 40 வயது என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டான். அவருக்கு இப்போது 57 வயதாகிறது. எனக்கோ 24 வயசு தான் ஆகுது.. அவன் என் வாழ்க்கையை நாசம் செஞ்சுட்டான். என்னை சித்ரவதை செய்ததாக கூச்சலிட்டு, அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் நியாயம் கேட்டுள்ளார்.

இந்த நிலையில், பெண் இன்ஸ்பெக்டர் ஆர்த்தியை அப்புறப்படுத்தினார். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ​​இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். பாஸ்கரின் இரண்டாவது மனைவி ஆர்த்தியின் உறவினர்கள் அவரை தாக்க வந்ததாக புகார் வந்தததையடுத்து அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

From around the web