150 சவரன் நகைகளுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் - இன்ஸ்டா பதிவால் சிக்கிய பின்னணி!

 
கள்ளக்காதல் வடபழனி

சென்னை வடபழனியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கணவரை ஏமாற்றி 150 பவுன் நகைகளுடன் கேரளாவைச் சேர்ந்த தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவான நிலையில், இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ஆதித்தன். இவருக்கும் இலக்கியா என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்று, ஒரு மகனும் உள்ளான். இந்நிலையில், இலக்கியா வீட்டிலிருந்த 150 பவுன் நகைகள் மற்றும் தனது குழந்தையுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கணவர் ஆதித்தன் இது குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நகை கொள்ளை

காவல்துறையினர் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆதித்தன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். போலீசாரின் விசாரணையில், இலக்கியா கேரளாவைச் சேர்ந்த 'ஜிஷ்னு' என்பவருடன் வீட்டை விட்டுச் சென்றது தெரிய வந்தது. ஜிஷ்னுவுக்கும் இலக்கியாவிற்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜிஷ்னுவின் அண்ணனுக்கு இலக்கியா இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பிய பக்கம் பக்கமான மெசேஜ்கள் போலீசாரிடம் சிக்கின. அதில், "ஜிஷ்னுவுடன் பல இடங்களில் ஊர் சுற்றியதாகவும், அடிக்கடி தனிமையில் சந்தித்ததால் கர்ப்பமடைந்து 6 மாதங்களில் தனது கர்ப்பத்தைக் கலைத்ததாகவும், ஜிஷ்னு தான் என் உலகம்" எனவும் அவர் குறிப்பிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

போலீசார் ரோந்து போலீஸ் காவலர் கொலை கொள்ளை

இதனையடுத்து, கணவரை ஏமாற்றி நகைகளைத் திருடிச் சென்ற வழக்கில் இலக்கியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பாதியளவு நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நகைகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.