கராத்தே கற்க வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. கராத்தே மாஸ்டர் அதிரடியாக கைது!

 
கர்ணன்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணாநகரைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கர்ணன் (வயது 36). இவர் ஒரு பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி கற்பித்து வந்த இவர், 20க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மாணவி ஒருவர் இது குறித்து கடந்த 24ம் தேதி புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைகள் நல கள அலுவலர் வீரமணி தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வீரமணி புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கர்ணனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று செந்துறை பிரிவு சாலை அருகே கர்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web