“அந்த அண்ணா குடும்பத்துக்கு இழப்பீடு கொடுங்க...” ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்தி உருக்கம்!

 
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கார்த்தி

மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்தி, ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கே. கார்த்தி, ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு நிசான் கார் மற்றும் ஒரு கன்றுடன் கூடிய பசு பரிசாக வழங்கப்பட்டது. அதே போன்று குன்னத்தூரைச் சேர்ந்த காளைகளை அடக்கிய அரவிந்த் திவாகர், 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

திருப்புவனத்தைச் சேர்ந்த காளைகளை அடக்கிய முரளிதரன், 14 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தைப் பிடித்தார். சிறந்த காளையாக சசிகலாவுக்கு சொந்தமான காலை தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த காளையின் பராமரிப்பாளர் மலையாண்டிக்கு ஒரு டிராக்டரும், கன்றுடன் கூடிய பசுவும் பரிசாக வழங்கப்பட்டன. 

வெற்றி பெற்றதும் கார்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மாடு பிடி வீரர்களுக்கு காப்பீடு போன்றவைகளை ஏற்பாடு செய்யலாம். அதே சமயம் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த அந்த அண்ணன் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்கினால் நன்றாக இருக்கும்’ என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web