செங்கோட்டை மலைப்பாதையில் கண்ணாடி ரயில் இயக்கம்... அக்.22 முதல் குருவாயூர் எக்ஸ்பிரஸில் அறிமுகம்!
Oct 18, 2026, 08:42 IST
தெற்கு ரயில்வே நிர்வாகம் மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் (எண்: 16327 / 16328) நவீன வசதிகள் கொண்ட விஸ்டாடோம் கண்ணாடிப் பெட்டிகளை இணைத்து இயக்கவுள்ளது.
சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்தப் பெட்டிகளில் பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை முழுமையாக ரசிக்கும் வகையில் கண்ணாடி மேற்கூரைகள், 180 டிகிரி சுழலும் வசதி கொண்ட இருக்கைகள் மற்றும் வைஃபை உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செங்கோட்டை மலைப்பாதையின் இயற்கைச் சூழலை பயணிகள் கண்டு மகிழும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையிலிருந்து அக்டோபர் 22 முதல் 2027 ஜனவரி 15 வரையிலும், குருவாயூரிலிருந்து அக்டோபர் 23 முதல் 2027 ஜனவரி 16 வரையிலும் இந்த விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
