அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை... ஞானசேகரன் திடீர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்டது.

சென்னை பெருநகர காவல் துறை அண்ணா நகா் துணை ஆணையா் புக்யா சினேக பிரியா, ஆவடி மாநகர காவல் துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குடன், முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கையும் சோ்த்து சிறப்பு புலனாய்வுக் குழு விரைவாக விசாரிக்கும் என உயா்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் ஞானசேகரனின் கைபேசியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களில் இருக்கும் பெண்களின் விவரங்களும், அதில் தொடா்புடையவா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் ஞானசேகரன் அளிக்கும் பதில்கள் அனைத்தும், எழுத்து பூா்வமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 7 நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், போலீஸ் காவலில் உள்ள ஞானசேகரனுக்கு பக்கவாதம் ஏற்பட்டதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
