பாத்ரூம் போகணும்.. உணவு டெலிவரி நபரை நம்பி வீட்டின் உள்ளே விட்ட பெண்.. அடுத்து நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம்!

 
ஆகாஷ்

பெங்களூரு எச்.ஏ.எல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்த பெண் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதன்படி உணவு விற்பனை பிரதிநிதி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து உணவை கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணை கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி வீட்டுக்குள் வந்து அந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்க சமையல் அறைக்குள் சென்ற போது, பின்தொடர்ந்து வந்த நபர், பெண்ணின் கையை பிடித்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அலறியடித்து சத்தம் போட்டார். இதனால் அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதுகுறித்து, எச்.ஏ.எல். காவல் நிலையத்தில்  அந்த பெண் புகார் அளித்தார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கலபுராகி மாவட்டம் சிஞ்சோலியைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 27) என்பவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. குண்டனஹள்ளி காலனியில் உள்ள தனியார் விடுதியில் ஆகாஷ் வசித்து வந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் உணவு விற்பனை பிரதிநிதி ஒருவரால் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web