பிரபல தொழிலதிபரை மணந்த GOAT பட நடிகை... !

 
கோட்


பிரபல நடிகை பார்வதி நாயர் சென்னை தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழா  தெலுங்கு மற்றும் மலையாள மரபுகளின் அடிப்படையில் நடைபெற்றது. இப்போது திருமண நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.  
'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'  கோட் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர், சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக்கை திருமணம் செய்த நிலையில்  திருமண நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

கோட்


இந்த திருமண நிகழ்வில் பார்வதி தனது பாரம்பரிய மணப்பெண் உடையில் பளபளப்பாக  அற்புதமான தங்க நிற சேலையை அணிந்திருக்கிறார். நுணுக்கமாக எம்பிராய்டரி செய்யப்பட்ட சேலையும் அதற்குப் பொருத்தமான ரவிக்கையும் கூடுதல் அழகாக பாரம்பரிய நகைகளையும்  அணிந்து தேவதை போல் மின்னுகிறார்.  மேலும் இளஞ்சிவப்பு தாமரை மலர் மாலைகள் அவரது தோள்களில் அழகாகச் சுற்றப்பட்டு  மணப்பெண்களின் வழக்கமான நடைமுறையான மருதாணியையும் கைகளில் அலங்காரமாக அணிந்திருந்தார்.  

கோட்


மணமகன் ஆஷ்ரித், பாரம்பரிய உடையில் பார்வதிக்கு ஈடுகொடுத்துள்ளார். அவரது தங்க நிற ஷெர்வாணி, ஒரு நீண்ட கோட் போன்ற ஆடை இத்துடன் பாரம்பரிய ஆடையான வெள்ளை வேட்டியும் அவருக்கு மாப்பிள்ளைக்கான களையைக் கொடுக்கிறது. அவரது உடையில் இருந்த தங்க நிற டிசைன்கள் பார்வதியின் உடையுடன் சரியாக ஒருங்கிணைந்து, ஜோடிப் பொருத்தத்தை ஹைலைட் செய்து காட்டுகின்றன. இந்நிகழ்வுகளில் 2 குடும்பங்களுக்கும் நெருக்கமான உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்துகொண்டனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!