’ கோட்’ லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு!
தமிழ் திரையுலகில் தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ளனர்.
It’s #TheGreatestOfAllTime experience in IMAX from #Sep5th@actorvijay Sir
— venkat prabhu (@vp_offl) August 8, 2024
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh @Ags_production@archanakalpathi @aishkalpathi @actorprashanth… pic.twitter.com/dgrrijxbge
ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் 3 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, தி கோட் படத்தை ஐமேக்ஸ் நிறுவனம் திரையிரங்குகளில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
