ரசிகர்கள் குஷி... 'கோட்’ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘கோட்’ படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. அப்பா- மகன் என விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாகத் தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் படத்தில் இருந்து விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் என நால்வரும் இருக்கும் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு டிரெய்லர் வெகு விரைவில் வர இருக்கிறது என்பதைத் தெரிவித்து இருந்தது.ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று படக்குழு டிரெய்லரை வெளியிட முடிவு செய்திருக்கிறது. படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் போன்றவை ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியே ஏற்படுத்தியது.

குறிப்பாக, விஜயின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் இணையத்தில் நெகட்டிவ் விமர்சனங்களையே சந்தித்தது. இதனால், விஎஃப்எக்ஸ் காட்சிகளை சரிசெய்யும் பணியில் வெங்கட்பிரபு மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த குறைகளை எல்லாம் சரிசெய்தே படத்தின் டிரெய்லரை வெங்கட்பிரபு வெளியிடுவார் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
