தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை... களைகட்டிய நல்லம்பள்ளி சந்தை!

 
ஆட்டுசந்தை சந்தை

வருகிற நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட மிகக் கடுமையாகக் களைகட்டியுள்ளது.

சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற மாவட்டங்கள் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர்.

ஆட்டு சந்தை ஆடு ரம்ஜான் ரமலான் பக்ரீத்

பண்டிகையை முன்னிட்டு கறி சமையலுக்காக ஆடுகளை வாங்கத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான வியாபாரிகளும் பொதுமக்களும் சந்தையில் குவிந்தனர். ஆட்டின் எடை மற்றும் தரத்திற்கு ஏற்ப ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை விற்பனையானது. ஒரே நாளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் ஆடுகளுக்கு நல்ல கூடுதல் விலை கிடைத்துள்ளதால், ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்த விவசாயிகள் மற்றும் வளர்ப்பாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.