திடீரென எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் கோயல் மல்லிக்.. மே.வங்கத்தில் பரபரப்பு!

 
திரிணாமுல்  கோயல் மல்லிக்!

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு பலத்த அரசியல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கோயல் மல்லிக் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கோயல் மல்லிக் எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பதவியேற்ற வெறும் மூன்றே மாதங்களிலேயே அவர் தனது எம்பி பதவியைத் துறந்துள்ள சம்பவம் மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் தற்போதைய அரசியல் சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகி வரும் சூழல் நிலவி வருகிறது. இத்தகைய உட்கட்சிப் பூசல்கள் மற்றும் விலகல்களுக்கு மத்தியில், தற்பொழுது மாநிலங்களவை எம்பியின் இந்த திடீர் ராஜினாமா மம்தா பானர்ஜிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இந்த திடீர் ராஜினாமாவிற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், இது தொடர்பாகத் திரிணாமுல் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.