ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளை - ஐதராபாத்தில் நகைக்கடையில் துணிகரம்!
Oct 7, 2026, 08:20 IST
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மேடிபள்ளி பகுதியில் 'கேரட் லேன்' என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. கடையின் பூட்டை உடைத்து நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம கும்பல், அங்கிருந்த விலை உயர்ந்த வைர ஆபரணங்கள் மற்றும் தங்க நகைகளைத் துணிகரமாகக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. கொள்ளைபோன தங்கம் மற்றும் வைர நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1 கோடி ஆகும்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேடிபள்ளி காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய கொள்ளையர்களை விரைந்து பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
