சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு - 104 டாலர்களாக அதிகரித்தது!

 
தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மீண்டும் திடீர் ஏற்றம் காணப்பட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார நிலவரங்களால் வர்த்தகத்தில் முக்கிய மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.

தங்கம் தங்கத்தின்

சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் 104 அமெரிக்க டாலர்கள் அதிகரித்து, இந்திய மதிப்பில் சுமார் ரூ.9,828 உயர்ந்து 4,470 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளி 1.88 டாலர்கள் அதிகரித்து 66.69 டாலராக விற்பனையாகிறது.

தங்கம்

சென்னையில் கடந்த நாட்களில் ஒரு கிராம் தங்கம் ரூ.14,240-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும் விற்கப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையின் இந்த அதிரடி விலை உயர்வு காரணமாக உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலையில் மேலும் தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாகச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.